தலைவலி

 என் தலைய உருட்ட எங்கிருந்து உதித்தாயோ
மண்டையில ஏறி மத்தளந்தான் அடித்தாயோ

துன்பம் வரும் வேளையில அவன் தோழனா நீ கைகோர்த்து வாரயில
வாழ வேணாமுன்னு வாளெடுத்து வீசத் தோணுது

மண்டையில கனகனக்க மத்ததெல்லாம் மறந்து நிக்க
எந்தன் இயல்பு குணம் மாறி நிக்க
எதையெதையோ நான் பேச..

பிரச்சனை தான் உன்ன பாத்தாக்கா
உன்னை வழியனுப்ப வாரம் நாலு தைலம் நான் தேய்க்க
வந்த வழி நீயும் போக

இன்பத்துல வந்திருந்தா எப்படியோ நான் பாத்துருப்பேன்
துன்பத்துல வந்த உன்ன வந்தவழி நான் துரத்துரேனே
வலியால் வழி தெரியல...

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: