கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

 கலரு கொஞ்சம் தேறணும்னு
கடல மாவ பூசிப்பாத்தேன்

சந்தனத்த கரச்சுப்‌பாத்தேன்
சாம்பலையும் போட்டுப்பாத்தேன்

குங்கும பாலும் குடிச்சுப்பாத்தேன்
பழத்தெ‌‌ல்லாம் பிழிஞ்சுப்பாத்தேன்

பல கிரீமும் போட்டுப்பாத்தேன்
பங்குனி வெயிலப்பாத்தேன்

பல துணியும் கட்டிப்பாத்தேன்
கருந்தோல் நிறத்துக்காரா

கவலை என்ன விழித்துக்கோடா
வெள்ளை அழகல்ல நிறமடா!!

Comments

Popular posts from this blog

இரவு

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: