இரவு
சுட்டெரிக்கும் வெயிலும் சூடானா காற்றும் என்னிடம் இல்லை
சுதந்திர புவியும் சுகம்தரும் அமைதியும்தான் என்னிடம் உண்டு
கதறிடும் சாலையும் சலசல ஊளையும் என்னிடம் இல்லை
காதல் பேச்சும் கனவின் வீச்சும்தான் என்னிடம் உண்டு
தென்றல் காற்றும் தேன்நிலா பாட்டும் எந்தன் சிறப்பு
நிலவின் ஒளியும் நிலக் குடையும் எந்தன் பொறுப்பு
கூட்டில் இணைவர் குடும்பம் காணுவீர்
குழப்பம் வேண்டாம் உறக்கம் கொள்வீர்..
- இப்படிக்கு இரவு
Comments
Post a Comment