கனவிடம் காதல்.. விரட்டுகிறேன்
கனவே விரையாதே விரைவில்
உன்னை நான் விரட்டிப் பிடிப்பேன்
நான் நகர நீயும் தூரம் நகர்கிறாய்
நான் உறங்க நீ விழித்து ஓடுகிறாய்
ஓடும் உன்னை நான் எப்படி பிடிப்பேனோ
கொஞ்சம் ஓரம் நில் உடனே வருகிறேன்
தடைகள் ஆயிரம் திசைகள் பல்லாயிரம்
அதனால் திகைக்கிறேன் விரைவில் திசை அறிவேன்
கனவே காத்திரு!! நம் காதல் கைகோர்க்க..
Comments
Post a Comment