ஒரு தேனியின் புலம்பல் 🐝:
வந்த வழி தெரியவில்ல! பூச்சிக்கொல்லி வாடையில வழி மறந்தேன்
வாடகைக்கு வீடெடுத்தேன்! வாசமல்லி வாடயுள்ள ரோஜாக்குள்ள
பூவும் பூத்துருச்சு!
வாடக வீடும் பூட்டீருச்சு
தேனெடுக்க வந்த என்ன!
தெருவுல தான் நிறுத்திருச்சு
நானொருத்தன் தான் இருக்கேன்!
பூக்களை காயாக்க
காரணத்தோட தான் சொல்றேன்!
கடைசிவரை என்ன காப்பாத்துங்க...
Comments
Post a Comment