காதல் கனவோ

 இரவின் முதலில் ஈரக்காற்றில்
இருகண் மூடி அவள் முகம் பார்த்தேன்

பிரம்மன் சிலையோ பீம‌ன்‌ கதையோ
எந்தன் துணையோ நீதானடி

பிரிவோம் சேர்வோம் பிறர் மனம் பறிப்போம் நம் வாழ்விலடி

காதலில் மூழ்கி அடித்தொட்டு வருவோம்
ஆழம் பார்ப்போமடி

கண்திரையை மூடி செவ்வாய் செல்வோம்
சில நாளில் திரும்புவோமடி

மனமது சேர்த்து காசி சென்று கரைப்போம்
நம் கசப்பையடி

ஐநா சபையில் அறப்போர் செய்வோம்
எட்டாம் அதிசயம் நீதானடி

உலகில் உள்ள அனைத்தும் மறைய
உன்னை நினைத்து உலகம் படைத்தேன்

எண்ணிப்பார்த்தால் உன் உலகம் தெரியும் என் மனம் புரியும்

ஏக்கம் கண்ணில் ஏங்கச்செய்கிறாய்
திரைகள் திறந்தேன் கனவோ நீ..

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: