அழகிய அவள்
இம்மண்ணில் தோன்றிய முதற் கணமே
உன்னைக் கண்ணில் கண்டேனே நான்
உன்னைக் கண்ணில் கண்ட நான் உன் கண்களைக் கண்டிருந்தால்
உன்னைக் கண்டம் கடத்த முயற்சித்திருப்பேனோ..
தெரியவில்லை..
உன் மிளிரும் முகமோ என்னைச் சிறைபிடித்து சிலையாக்கியது
உன் கூந்தல் நிறம் கண்டு குதித்தேன் என்னைவிட கருத்தது என்று
உன் கருவிழிகள் கண்டு
கரைந்து கரை ஒதுங்கினேன்
காரிருள் பெற்ற கண்ணை வெண்ணிலவுகள் வேவு பார்க்கின்றன
வெள்ளை மேடுகளாய்
புருவத்தில் படர்ந்த பட்டுக்கோடியோ
என் பல்லைக் காட்ட வைக்கிறது
உன் இதழோர சிரிப்போ
என்னை இமயம்போல் சிலிர்க்க வைக்கிறது
தாயே உன் திருமண படம் பார்த்தால்
இவையே தோன்றுகிறது...
Comments
Post a Comment