பிறந்தநாள் படைப்பை
எண்ணிய யாவும் நிறைவேற
உன்னை பிரிந்தவர் ஆன்மா வழிநடத்தட்டும்
இடையில் வந்த இடர் அனைத்தும்
இவ்விடமே உன்னை பிரிந்து செல்லும்
என்றும் சிரிக்கும் உனக்காக, இன்று
Emoji க்கள் சிரித்து மகிழ வைக்கும்
Likes கள் குவிந்திடும்
காற்றும் குயிலும் உன் பெயர் பாடும்
இன்பக் கனியும் உன் சுவை தரும்
பூவின் மனமோ உன் மனமாகும்
வேரின் உறுதியே உன் குருதியாகும்
கவிஞர்கள் வரிகள் உன்னைப் பாடும்
புலவர்கள் பழமை உன்னைப் பேசும்
அனைவரின் மனமும் உன்னைத் தேடும்
மலர்கள் பூத்துக் குவியும்
மழைச் சாரல் மண்வாசம் தரும்
இவை யாவும் இன்றே அரங்கேறும்
ஏனென்றால் உன் பிறந்தநாள்
Comments
Post a Comment