சிறைக்கூடம் (கைபேசி):

 என் இரவில் பங்கு கேட்கிறாய்
எதை எதையோ காட்டிச் செல்கிறாய்

இரவிலும் என் முகம் மிளிரச் செய்கிறாய்
ஈரம் என் கண்ணில் வடியச் செய்கிறாய்

எங்கும் உன்னைத் தூக்கிச் செல்கிறேன்
எதற்கும் உன்னையே பார்த்துச் சொல்கிறேன்

ஏனோ என்னை மறந்து செல்கிறேன்
சிந்திக்கும் திறனை துறந்து செல்கிறேன்

மறந்து உன்னைத் தூக்கி உதற
மனமும் ஏனோ மறந்து போனது

மயங்கிய நிலையில் மசமசத்துப் போனேனோ
மாயாவனே நீ என்னை மயக்கும் திரையோ

நானே உந்தன் அடிமை ஆனேனோ
இல்லை நீயே என்னை அடக்கி ஆழ்கிறாயோ...

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: