தாய்மொழி

 காலம் பிறக்க காலம் பிறக்க
கடந்து பிறந்தாய் கறந்த பால் போல

அழுது பிறந்தாய் இவ்வுலகில்
ஆடி எழுந்தாய் அதன் பிறகில்
தேடி நடந்தாய் மிக விரைவில்
ஓடி திரிந்தாய் உன் உலகில்
பாடி மகிழ்ந்தாய் குழந்தை முடிவில்

காலம் நடக்க காலம் நடக்க
மிதந்து சென்றாய் நாவலின் பயணம் போல

படிக்க சென்றாய் பின் விரைவில்
பழகி சிரித்தாய் உன் உடனி‌ல்
பலவும் காற்றாய் இப்பருவில்
ஆடி மகிழ்ந்தாய் உன் இயல்பில்
கூடி நெகிழ்ந்தாய் இளம் முடிவில்

காலம் கடக்க காலம் கடக்க
கரைந்து தெளிந்தாய் கடலின் உப்பை போல

தேர்ந்து முடித்தாய் உன் படிப்பை
தேர்ந்தெடுத்தாய் என் துடிப்பை
தேற்றி திரித்தாய் என் இனத்தை
ஈன்றெடுத்தாய் என் பிறப்பை

காலம் நின்றது காலம் நின்றது
கலங்கரை விளக்கை போல

காட்டி ஊட்டிய முழு நிலவு‌ம்
கடித்து உண்ட உன் உணவும்
கரைந்து போகுமா நம் மனதில்
காட்டிய வழியில் சென்றிடுவோம்
காதலை உன்னிடம் தந்திடுவோம்

காலம் வருகுது காலம் வருகுது
வாடிய உன்னை தேற்றிடுவேனே

பெற்றெடுத்து கற்றறிய வைத்தாய் நீயே
கற்றறிந்த நான் உன்னை இனி பெற்றெடுத்து
வளர்ப்பேனோ பேணி காப்பேனோ தெரியவில்லை.
என்னை வளர்க்க உன் வாழ்வை தொலைத்தாய். நான் வளர்ந்தேன்.
இந்நாள் முதல் உன் வாழ்வை வாழேன்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: