காணாமலே போச்சு 😕

 வட்ட நிலவுல
வட சுட்ட ஆயாக்கதை

வானத்துல தெய்வமுன்னு
பாத்து சொன்ன பழய படம்

வாகனம் தான் வேணுமுன்னு
வாங்கி ஓட்டின பழய டயர்

வளந்து குட்டி தருமுன்னு
பொத்தி வளர்த்த மயிலிறகு

வாச்ச பாருங்கனு
வாங்கி ஒட்டு ஜவ்வுமிட்டாய்

வயித்துல செடி முளைக்குமுன்னு
திங்காம விட்ட மாங்கொட்டை

பொன்வண்ட பாருங்கனு
பிடிச்சு வந்த வண்டுக்கூட்டம்

இவை எல்லாம் எங்கன்னு தேடவேணாம்
தொடர்ருங்க!!

Comments

Popular posts from this blog

இரவு

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

அழிவின் விளிம்பில் அன்னை சமூகம்: