Posts

GDB commands for Easy Debugging

 GDB commands: 1) b function_name ----> breakpoint for that function, 2) p variable_name ----> To print a variable in Gdb  3) bt -----> backtrace of that function 4) for slient breakpoint[image doesn't stop even breakpoint gets hit] command Breakpoint_Num[like 1,2,3,etc] <we can print variable> <we can give bt command> c  ---> continue end ---> end of slient break point 5) set pagination off ----> this will help once bt is very long  6) conditional breakpoint,   b function_name if variable == value      breakpoint will hit only when that variable name is equal to that value    7) b filename:line_number ----> line breakpoint,gets hit once that line gets hit

Useful Screen Commands for Linux

 screen commands; 1) screen -S name ---> New screen creation 2) screen -dr Existing_name  ---> open already existing screen 3) screen -x Existing_name  ----> same screen to open in multiple machine 4) ctrl A + shift H ----> for screen log,log file can be seen in /root path in the name of screenLog.* 5) ctrl A + shift H ---->Remove screen log if already there. 6) Ctrl A + shift A ----> To name the bash 7) Fn F1 ---> Move left of bash in screen. 8) Fn f2 ---> Move Right of bash in screen.  

நம்ம வாழ்க்கை எத நோக்கி பயணம் பண்ணுதுனே தெரிலயே...!

 விண்ணைத்தொட அறிவியல் வாயத்தான் பொளந்து நிக்க வீணாப்போன ஜனம் பள்ளிப்பிள்ளைய கட்டிவைக்க மண்ணைப் பொளக்கவரும் அரசியல் தான் திமிரிநிக்க மண்ணுல போறவனே காசத்தான் கடிச்சுத்திங்க எண்ணமுடியாத பலதுயர் சமூகத்தில் தங்கிநிக்க எதுவும் தெரியாம மது போதையில் மயங்கிநிக்க கண்ணமூடாம கணினித்துறை வளந்துநிக்க கனவத் தொலச்சவனே இ‌ப்படித்தான் காலம் போகுமோ..?

ஏக்கம் :

 எங்கு சென்றானோ என் மகன் என்று வருவானோ என தாய் என்னை நினைப்பானோ இல்லை மறப்பானோ என்னை ஏற்பானோ என காதலி என் கடனை அடைப்பானோ காசு சேர்ப்பானோ என்னை மீட்பானோ என தந்தை என்ன உழைப்பானோ என்ன இழப்பீடோ ஏதும் மறைப்பானோ என முதலாளி என் உயிராவோ என் உறவாவோ என்றும் நிற்பானோ என நண்பன் என்று அடைவேனோ என் இலக்கை நானோ இல்லை மறைவேனோ என நான் ஆக ஏக்கத்தின் வழியில் பயணிப்போம் வாரீர்...

கருத்த தோலும் கொஞ்சம் கருத்தும்:

 கலரு கொஞ்சம் தேறணும்னு கடல மாவ பூசிப்பாத்தேன் சந்தனத்த கரச்சுப்‌பாத்தேன் சாம்பலையும் போட்டுப்பாத்தேன் குங்கும பாலும் குடிச்சுப்பாத்தேன் பழத்தெ‌‌ல்லாம் பிழிஞ்சுப்பாத்தேன் பல கிரீமும் போட்டுப்பாத்தேன் பங்குனி வெயிலப்பாத்தேன் பல துணியும் கட்டிப்பாத்தேன் கருந்தோல் நிறத்துக்காரா கவலை என்ன விழித்துக்கோடா வெள்ளை அழகல்ல நிறமடா!!

இயல்பே இனிமை:

 சின்ன தூரலில் சிதறிய துளியாய் சிறுவன் கையில் உருகிய கோனாய் அழகிய மழையில் ஆடிய மயிலாய் அடர்ந்த வனத்தில் ஓடிய   புலியாய் ஆலம் விழுதில் கூடிய உறவாய் அதிசய புதையல் கண்ட மனமாய் பிறந்த பிஞ்சை பார்த்த கணமாய் இயல்பு வாழ்க்கை இனிக்கும் சுகமாய்...

ஒரு தேனியின் புலம்பல் 🐝:

 வந்த வழி தெரியவில்ல!  பூச்சிக்கொல்லி வாடையில வழி மறந்தேன் வாடகைக்கு வீடெடுத்தேன்! வாசமல்லி வாடயுள்ள ரோஜாக்குள்ள பூவும் பூத்துருச்சு!             வாடக வீடும் பூட்டீருச்சு தேனெடுக்க வந்த என்ன!             தெருவுல தான் நிறுத்திருச்சு நானொருத்தன் தான் இருக்கேன்!              பூக்களை காயாக்க காரணத்தோட தான் சொல்றேன்! கடைசிவரை எ‌ன்ன காப்பாத்துங்க...